உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா கோலாகல துவக்கம்

ராமநாதபுரம் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா கோலாகல துவக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா இன்று கோலாகலமாக துவங்கியது.


ராமநாதபுரம் அருகே பெருவயல் ரெணபலி முருகன் கோயில், ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில்களில் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இதை வள்ளி, தேவசேனா சமேத சுவாமிக்கு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடந்தன. அங்கு நவ.,15 இரவு சூரசம்ஹாரம், நவ.,16 ல் திருக்கல்யாணம் நடக்கிறது. இதே போல் குண்டுக்கரை முருகன் கோயில், பட்டணம்காத்தான் வினை தீர்க்கும் வேலவர் கோயில், ராமநாதபுரம் வடக்கு தெரு பாலசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதியில் கந்த சஷ்டி விழா காப்புகட்டுதலுடன் துவங்கியது. நவ.15 ல் சூரசம்ஹாரம் நடக்கிறது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா நடைபெறும். நேற்று வள்ளி, தெய்வானையுடன் முருகன் அலங்காரத்தில் காட்சியளித்தார். சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடத்தபட்டு பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நவ.15 ல் முருக பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் காட்சி நடைபெறும். அன்று மாலை முருகபெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும். இவ் விழாவை முன்னிட்டு கோயிலில் சூரபத்மன் சிலையை வர்ணம் தீட்டி அலங்கரிக்கும் பணிகள் நடக்கிறது.


*பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுடன் துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலிக்கிறார்.


நவ., 14 அன்று சக்திவேல் வாங்கும் நிகழ்வு நடக்கிறது. மறுநாள் மாலை சக்தி வேலுடன் முருகன் வலம் வந்து வைகை ஆற்றின் கரையில் சூரசம்ஹாரம் நடக்க உள்ளது.


இதேபோல் பாரதி நகர் முருகன் கோயில் மற்றும் பால்பண்ணை அருகில் உள்ள முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழாவில் திருக்கல்யாணம் மற்றும் சூரசம்ஹாரம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !