உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளமல் பதஞ்சலி மனோகர் கோவிலில் அமாவாசை அன்னாபிஷேகம்

விளமல் பதஞ்சலி மனோகர் கோவிலில் அமாவாசை அன்னாபிஷேகம்

திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் அமாவசையை முன்னிட்டு அன்னாபிஷேகம் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர் அருகே விளமலில் மிகவும் பழமை வாய்ந்த பதஞ்சலி மனோகரர் திருக்கோவில்  உள்ளது. இக்கோவிலில் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமியில் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. நேற்று அமாவாசையை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !