உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் இரு விழாக்கள்

திருப்பரங்குன்றம் கோயிலில் இரு விழாக்கள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு தீர்த்த உற்சவமும், மாத கார்த்திகையை முன்னிட்டு சுவாமி புறப்பாடும் நடந்தது.

தீர்த்த உற்ஸவம்: பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணப்பொய்கை கொண்டு செல்லப்பட்டார். ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது. மாத கார்த்திகை: சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம், பூஜை முடிந்து சிறப்பு அலங்காரமாகி நேற்று இரவு வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடாகி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாளித்தனர். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை அன்று தங்க மயில் வாகனத்தில் ரத வீதிகளில் சுவாமி புறப்பாடு நடக்கும். ஆண்டுக்கு ஒரு முறை வைகாசி மாத கார்த்திகை அன்று மட்டும் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு நடக்கும். அமாவாசையை முன்னிட்டு கோட்டை வராஹி வழிபாட்டு மன்றத்தில் அம்மனுக்கு அபிஷேகம் பூஜை முடிந்து சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !