உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனூர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கொடியேற்றம்

தேனூர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கொடியேற்றம்

சோழவந்தான்: மேற்கு ஒன்றியம் தேனூரில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உற்சவ விழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து சுவாமி சமேதரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மே.3ல் கள்ளழகர் திருக்கோலத்தில் திருமஞ்சனம் சாற்றி வீதியுலா புறப்பாடு நிகழ்வும், மே.4ல் கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வும், மே.5ல் கள்ளழகர் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வும், மே.6ல் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. தர்மகர்த்தா நெடுஞ்செழிய பாண்டியன், விழா குழுவினர், கிராம மக்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !