வைகாசி பொங்கல் விழா
ADDED :880 days ago
கமுதி: கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டி கிராமத்தில் தர்ம முனிஸ்வரர், கருப்பணசாமி கோயிலில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்கினி சட்டி, வேல் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். தர்ம முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், சிறப்புபூஜை நடந்தது.கோயில் முன்பு கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். சிறப்பு நிகழ்ச்சியாக பக்தர்கள் தானமாக வழங்கிய 200க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு அசைவ விருந்து வழங்கப்பட்டது. விழாவில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.