உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளமடையில் தர்மராஜர் கோவில் குண்டம் திருவிழா

வெள்ளமடையில் தர்மராஜர் கோவில் குண்டம் திருவிழா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை தர்மராஜர் கோவில் குண்டம் திருவிழா நாளை நடக்கிறது.

இங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இத்திருவிழா கடந்த 8ம் தேதி விநாயகர் சாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து கொடி திருவீதி ஊர்வலம், கொடியேற்றம், விநாயகர் பொங்கல், சக்தி கரகம் அழைத்தல், திருக்கல்யாண உற்சவம், அரவான் சிரசு, போத்தி ராஜா ஊர்வலம் ஆகியன நடந்தன. இன்று காலை, 5:00 மணிக்கு குண்டம் திறத்தல், மாலை, 5:00 மணிக்கு குண்டம் பூ போடுதல், ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நாளை காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதல், தொடர்ந்து, பொங்கல் வைத்தல், அன்னதானம், மாலை, 5:00 மணிக்கு மஞ்சள் கரகம், அக்னி சட்டி எடுத்தல், நாளை மாடுபிடி சண்டை, அர்ஜுனன் தபசு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 27ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 28ம் தேதி முத்தாலம்மன் பொங்கல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !