புதிய ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு : தினமலர் செய்தி எதிரொலி
ADDED :890 days ago
மேலுார்; திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயிலில் திருவிழா காலங்களில் சுவாமி புறப்பாட்டிற்கு புதிதாக ரிஷப வாகனம் கடந்த 4 வருடங்களுக்கு முன் செய்யப்பட்டது. இவ் வாகனத்தை சுமப்பதற்கு சீர்பாதங்கள் இல்லாமல் பழைய, சிதிலமடைந்த ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடாகியதால் அசம்பாவிதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக இன்று ரிஷபவாகனத்திற்கு கண் திறக்கப்பட்டு முதன் முறையாக புதிய ரிஷப வாகனத்தில் திருமறைநார், வேதநாயகி அம்பாளுடன் எழுந்தருளி கோட்டையை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.