சனிக்கிழமை பெருமாளை வழிபட நலம் பெருகும்.. செல்வம் சேரும்!
ADDED :896 days ago
சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்குரிய நாள், நவகிரகங்களுள் எல்லோரையும் அச்சுறுத்தும் சனிபகவான் ஆயுள்காரகன் ஆவார். அதாவது, ஒருவரது பூரண ஆயுளுக்கு இவரே காரணம் ஆனால், அந்த சனி பகவானையே தன் கட்டுக்குள் கொண்டு வருபவர் பெருமாள். எனவேதான். சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கினால், சனியின் தாக்கம் குறையும். ஒருவரைப் பிடித்த பிணி, பீடைகள் திருஷ்டி போன்றவை விலகும் என்று சொல்லப்படுகிறது. வேங்கடவனைத் தியானித்து, சனிக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால், நலம் பெருகும். செல்வம் சேரும்!