உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை, வெயிலில்காயும் மதுசூதனபெருமாள் கோவில் தேர்; கவனிக்க வலியுறுத்தல்

மழை, வெயிலில்காயும் மதுசூதனபெருமாள் கோவில் தேர்; கவனிக்க வலியுறுத்தல்

நாகர்கோவில்: பறக்கைம துசூதன பெருமாள் கோவில் தேர் வெயில் மற்றும் மழை காலங்களில் பாதிப்படைவதால் இதை முறையாக கவனிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பறக்கை மதுசூதனபெருமாள் கோவிலில் தேர்த்திருவிழா நடந்து மூன்று மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை தேரின் மேல் கூரை வேயாமல் வெயிலிலும் மழையிலும் நிற்கிறது. பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்ட போதிலும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட வில்லை. இப்படியே நின்றால் தேர் சேத மடையும். இந்து அறநிலையதுறை கோவில் பணிகளை தவறாது செய்ய வேண்டும். பூஜைகள் பூ அலங்காரம் இன்றி நடப்பதாக தெரிகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கோவில் நலன்களை குறைவின்றி செம்மையாக செய்து தர வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !