காஞ்சி மகா பெரியவரின் ஆராதனை விழா; சிறப்பு அபிஷேகம்
ADDED :1 days ago
நெய்வேலி; காஞ்சி மகா பெரியவர் ஆராதனை விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள அண்ணா கிராமத்தில், ஸ்ரீசப்த விநாயகர் மற்றும் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள் கோவில் உள்ளது. இங்கு நேற்று மகா பெரியவரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு ஆராதனை திருவிழா சிறப்பாக நடந்தது. இதையொட்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. நுாற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.