வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் விதியே காரணமென்பது சரியா?
ADDED :944 days ago
தெரிந்தே தவறு செய்பவர்கள் இக்காலத்தில் அதிகம். எனது வருமானம் 10 ரூபாய். நான் நுõறு ரூபாய் கடன் வாங்கி வீடு கட்டலாம். ஆனால், 500 ரூபாய் வாங்கி பெரிய வீடாகக் கட்டி விட்டு, வட்டியும் கட்ட முடியாமல், அசலும் கட்ட முடியாமல், கட்டிய வீட்டையும் இழந்து, கிடைத்த சாப்பாட்டையும் இழந்து விட்டேன் என்றால், அது விதியல்ல! தெரிந்தே செய்த தவறு. இப்படிப்பட்டவர்கள் தான், ‘ஐயோ! விதி சதி செய்து
விட்டதே’ என புலம்புகிறார்கள்.