உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறத்தி அம்மன் கோயில் விழா

குறத்தி அம்மன் கோயில் விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலசேந்தனேந்தல் குறத்தி அம்மன் கோயில் வைகாசி விழா நடைபெற்றது. முன்னதாக, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன்பு, பொங்கல் வைத்தும், கரகம் எடுத்தும் ஊர்வலமாக சென்று மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !