சிதம்பரம் நடராஜர் கோவிலில் செங்கோலுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு
ADDED :941 days ago
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் செங்கோல் வழிபாடு நடந்தது.
டில்லியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் திருவாவடுதுறை ஆதினத்தால், நேருவுக்கு அளிக்கப்பட்ட செங்கோல் தற்போது பிரதமர் மோடியால் நிறுவப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள பழமைவாய்ந்த செங்கோலுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர், வெங்கடேச தீட்சிதர், சம்பந்த தீட்சிதர், ராஜா தீட்சிதர் உள்ளிட்டோர் பங்கேற்று இந்தியாவில் தர்மத்தின் ஆட்சியான செங்கோல் ஆட்சி நிலைக்கட்டும் என உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் கோளறு பதிகம் பாடி செங்கோலுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.