உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களுக்கு சிருங்கேரி பீடாதிபதி அருளாசி

பக்தர்களுக்கு சிருங்கேரி பீடாதிபதி அருளாசி

புதுச்சேரி; எல்லைப்பிள்ளை சாவடி சாரதாம்பாள் கோவிலில் நேற்று சிருங்கேரி சிவகங்கா மடத்தின் பீடாதிபதி புருேஷாத்தம பாரதி சுவாமிகள் சிறப்பு பூஜை நடத்தி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

புதுச்சேரி, எல்லைப் பிள்ளைச்சாவடியில் உள்ள சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலுக்கு நேற்று இரவுசிருங்கேரி சிவகங்கா மடத்தின் பீடாதிபதி புருேஷாத்தம பாரதி சுவாமி கள் வருகை தந்தார். பின்னர், அவர் கோவிலில் உள்ள சாரதாம்பாள் மற்றும் அபய ஆஞ்சநேயருக்கு பூஜைகள் செய்து மகாதீபாராதனை காண்பித்தார். பின்னர் அவர், பக்தர்களுக்கு அருளாகி வழங்கினார். சுவாமிகளின் வருகையை முன்னிட்டு, இன்று 30ம் தேதி காலை 7:00 மணிக்கு, கோவிலில் உள்ள அதிஷ்டாணம், சாரதாம்பாள் மற்றும் அபய ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. பின், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு சுவாமிகள் அருளாசி வழங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !