பழநி முருகன் கோயிலில் நிழற்ப்பந்தல் சரிந்தது
ADDED :905 days ago
பழநி: பழநி, முருகன் கோயிலில் பக்தர்கள் வெயிலின் தாக்கம் குறைக்க அமைக்கப்பட்ட நிழற்ப்பந்தல் பலத்த காற்றால் சரிந்து விழுந்தது. பழநி, முருகன் கோயிலில் பகலில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க வெளிப்பிரகாரத்தில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டன. பழநியில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது இதில் முருகன் கோயிலில் அமைக்கப்பட்ட நிழல் பந்தலில், வடக்கு பிரகாரத்தில் இருந்த நிழல் பந்தங்கள் சரிந்து விழுந்தன. அப்போது பக்தர்கள் அப்பகுதியில் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.