வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோயிலில் தெப்ப திருவிழா
ADDED :905 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோயிலில் முத்துமாரியம்மன் தெப்பத்தில் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த வாரம் நிறைவு பெற்றது. நேற்று முன்தினம் திருவிழா மறுபூஜை சிறப்பாக நடந்தது. அன்று இரவு முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள தெப்பத்தில் வீற்றிருந்தார். சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை உபயதாரர்கள், விழா கமிட்டியினர், அன்னதான, திருப்பணி குழுவினர், அறநிலைத்துறையினர் செய்திருந்தனர்.