அதுல்ய நாதீஸ்வரர் கோவில் தேரோட்டம்
ADDED :871 days ago
திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் வைகாசி விசாக மகோத்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது. அரகண்டநல்லூர், அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக மகோத்சவ பெருவிழா கடந்த மாதம் 24 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான நேற்று தேரோட்ட வைபவம் நடந்தது. காலை 7:30 மணிக்கு அழகிய பொன்னம்மை உடனுறை அதுல்ய நாதீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருள, ஓம் நமச்சிவாயா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை கோவில் வளாகத்தில் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.