திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மொட்டையரசு திருவிழா
ADDED :959 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான மொட்டையரசு திருவிழா இன்று நடந்தது. கோயிலில் மே 24ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய விசாக திருவிழாவில் தினம் இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வசந்த உற்சவம் நடந்தது. நேற்று பால்குட உற்சவம் நடந்தது.
மொட்டையரசு திருவிழா: நேற்று காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம், ஆராதனைகள் முடிந்து தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளினர். பக்தர்களின் திருக்கண் மண்டபங்களில் அருள்பாலித்து, இரவு பூ பல்லக்கில் சுவாமி கோயில் சென்றடைகிறார்.