உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி பெருமாள் கோவில்களில் கருட சேவை உற்சவம்

பண்ருட்டி பெருமாள் கோவில்களில் கருட சேவை உற்சவம்

பண்ருட்டி; பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு, கருட சேவை உற்சவம் நடந்தது. கோவிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. 5:30 மணியளவில் உற்சவர் பெருமாள் உதய கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சாமி மாட வீதியுலா நடந்தது.

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் மூலவர் சிலைகள் அத்திமரத்தாலானது சிறப்பாகும். இக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.உற்சவர் கருடசேவை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !