தென்னம்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1058 days ago
வடமதுரை; வடமதுரை தென்னம்பட்டியில் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று துவங்கி இரண்டு கால யாக பூஜைகளை தொடர்ந்து இன்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. ஊர் பெரியதனக்காரர்கள் கிருபாசங்கர், சுப்புதுரைச்சாமி, வெங்கடேஷன், பாலசுப்பிரமணியன், அய்யாத்துரை, மருததுரை தலைமை வகித்தனர். பழநி ஆண்டவர் பாதயாத்திரை குழு தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் அபிராமிஅம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் குருநாத குருக்கள் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.