செல்லாண்டியம்மன் கோவிலில் 91வது ஆண்டு கரக உற்சவ விழா
ADDED :866 days ago
குன்னூர்: குன்னூர் வெலிங்டன் லூர்துபுரம் செல்லாண்டியம்மன் கோவிலில் 91 வது ஆண்டு கரக உற்சவ விழா நடந்தது.
கடந்த 1ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. இதில் அருள்காடு கருப்பராயர் கோவிலில் இருந்து விரதம் இருந்த பக்தர்களின் கரக அலங்கார ஊர்வலம், தேர்பவனி, அம்மன் கரக ஊர்வலம் நடந்தன. தொடர்ந்து மாவிளக்கு பூஜை கன்சிவர்த்தல் அன்னதானம் நடந்தன. விரதம் இருந்த பக்தர்கள் பூ குண்டம் இறங்கி தங்களுக்கு நேர்த்தி கடனை செலுத்தினர். மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. நாளை எண்ணெய், பால் வார்த்தல் நிகழ்ச்சிகள், மதுரை வீரன் பூஜை நடக்கிறது. (7ம் தேதி) காட்டேரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகளுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.