நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி
ADDED :920 days ago
மயிலாடுதுறை: தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானத்தை சந்தித்து நடிகர் ரஜினி மகள் ஆசி பெற்றார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை திரைப்பட நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா விசாகன் தம்பதியினர் நேரில் சந்தித்து ஆசிபெற்றனர். அவர்களுக்கு தருமை ஆதீனம் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி ஆசிவழங்கினார். முன்னதாக நவகிரக ஸ்தலங்களில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கிவரும் வைத்தீஸ்வரன் கோவிலிலில் சவுந்தர்யா, விசாகன் தம்பதியினர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.