ஸ்ரீரங்கம் கோயிலின் புதிய இணை கமிஷனர் பொறுப்பேற்பு
ADDED :922 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் புதிய இணை கமிஷனராக சிவராம்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து பழனி பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு இணை கமிஷனராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சிவகங்கை மாவட்ட துணை கமிஷனர் பணியில் இருந்த சிவராம்குமார் இணை கமிஷனராக பதவி உயர்வு பெற்று ஸ்ரீரங்கம் கோயில் புதிய இணை கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.