கடம்பவனேஷ்வரர் சுவாமிக்கு கற்கோயில் கட்ட பூமி பூஜை
ADDED :927 days ago
நரிக்குடி: நரிக்குடி இருஞ்சிறையில் கற்கோயில் கட்ட பூமி பூஜை நடந்தது.
நரிக்குடி இருஞ்சிறையில் மிக பழமையான மரகதவள்ளி, ஸ்ரீகோடி கடம்பவனேஷ்வரர் சுவாமிக்கு கற்கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. கயிலாய வாத்தியங்கள் முழங்கப்பட்டது. சிறப்பு யாகங்களுடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் வீடுகளில் மஞ்சள், புஷ்பங்கள் கலந்த புனித நீரை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.