சங்கடஹர சதுர்த்தி; கணபதியை வழிபட கஷ்டம் தீரும்.. எல்லாம் வெற்றியாகும்
ADDED :849 days ago
வரும் சங்கடம் அனைத்தையும் நீக்க வல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடுகள் நடப்பது போல், விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கின்றனர். திருமணத்தடை நீங்க, தோஷங்கள் தீர, குழந்தை செல்வம் கிடைக்க, கடன் தொல்லை தீர, வேலை வாய்ப்புக் கிடைக்க, இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். சிவகணங்கள் எனப்படும் இறைவன் சிவபெருமானின் படைகளுக்கு பதி அதாவது தலைவன் என்பதால் கணபதி என பிள்ளையார் அழைக்கப்படுகின்றார். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும். இந்நாளில் விநாயகரை வழிபட்டால் தடையனைத்தும் விலகும். எல்லாம் வெற்றியாகும்.