உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ஜம்மு: ஜம்முவில்  திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு  முழுவதும் உள்ள சீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்காக ஆங்காங்கே  இடம் வாங்கி திருமலை திருப்பதியில் இருப்பது போலவே கோவில்  கட்டி கும்பாபிஷேகம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஜம்முவில் திருமலை திருப்பதி கோவில்  30 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டு, இதற்கான யாகசாலை  பூஜைகள் 3ம் தேதி துவங்கியது. ஜூன் 04 ம் தேதி அக்னி பிரதிஷ்டா, கும்பஸ்தாபனம், கும்ப ஆராதனை, விக்னேஷ்வர பூஜையும்,  ஜூன் 05 ம் தேதி நவ கலச ஸ்தாபனமும், யாகசாலை பூஜைகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, இன்று ஜூன் 08ம் தேதி காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் தேவஸ்தான போர்ட் தலைவர்-சுப்பா ரெட்டி, தேவஸ்தான போர்ட் உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணா ராவ் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !