சக்கம்பட்டி மங்கள விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :871 days ago
சக்கம்பட்டி : சக்கம்பட்டி மேலத்தெரு மங்கள விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வன் கோயில்களில் பிரதோஷ வழிபாடுகள் நடப்பது போல், விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கின்றனர். இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சக்கம்பட்டி மேலத்தெரு மங்கள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.