கல்யாண விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1025 days ago
கோவை ; ராம் நகர் சரோஜினி வீதியில் உள்ள கல்யாண விநாயகர் கோயிலில் வைகாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கல்யாண விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் தங்கக்காப்பு கவசத்தில் மூலவர் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.