உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல் முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனி முனீஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதியில் கும்பாபிஷேகம் நடந்தது.திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனி முனீஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை மேடை அமைத்து, புனித நீர் கலசங்களுடன் பூஜைகள் நடந்தன. 4ம் கால பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கோயிலை சுற்றி வந்தனர். பின்னர் முனீஸ்வரர், விநாயகர் கும்பம் மீது சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. கருடன் வலம் வர பக்தர்கள் அரோகரா கோஷமிட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் குருஜெகநாதன், ஓய்வு எஸ்.ஐ., கிருஷ்ணன், சவுந்தரபாண்டியன், சிவானந்தம், வேல்முருகன், மனோஜ்குமார், ராஜேஷ், மாயாண்டிதேவர், பாலுபாட்ஷா செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !