திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்
ADDED :824 days ago
விழுப்புரம்: திண்டிவனம் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி மாதம் பிரம்மோற்சவத்தையொட்டி திருத்தேர் வீதி உலா நடந்தது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி மாதம் பிரம்மோற்சவ திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக கனகவல்லி தாயாருடன் லட்சுமி நரசிம்மர் பெருமாள் தேரில் எழுந்தருள சிறப்பு பூஜைகளுக்கு பின் கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.