உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாணார்பட்டி அருகே மழை வேண்டி சிறப்பு வழிபாடு

சாணார்பட்டி அருகே மழை வேண்டி சிறப்பு வழிபாடு

சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே வடகாட்டுபட்டியில் மழை வேண்டி கிராம மக்கள் மலையாள பகவதி அம்மன், காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டியில் மலையாள பகவதி அம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் நொடி இல்லாத வாழ்வு தரவேண்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !