பாளை திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் விமானத்திற்கு பாலாலயம்
ADDED :902 days ago
திருநெல்வேலி: கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறவுள்ளதால் பாளை., திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம், விமானத்திற்கு பாலாலயம் நடந்தது. பாளை கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் துவங்கவுள்ளது. ராஜகோபுரம், விமானம் ஆகியவற்றிற்கு விமான பாலாலயம் நேற்று நடந்தது. விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜையுடன் துவங்கியது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 2வது கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனையுடன் கோயில் ராஜகோபுரம், விமானங்களுக்கு பாலாலயம் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராஜகோபுரம், விமானத்திற்கு விரைவாக திருப்பணிகள் துவங்கப்படவுள்ளது.