உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் தேர் சுத்தம் செய்யும் பணி தீவிரம்; ஜூலை 2ல் தேரோட்டம்

நெல்லையப்பர் கோயிலில் தேர் சுத்தம் செய்யும் பணி தீவிரம்; ஜூலை 2ல் தேரோட்டம்

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் தேரை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு விநாயகர் கோயில்
கொடியேற்றம் நடந்தது. நெல்லையப்பர் கோயில் ஆனித்தேர் திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. ஜூலை 2ம் தேதி சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்திற்காக தேரை சுற்றியுள்ள கூண்டுகளை அகற்றும் பணிகள், தேர் சட்டங்களை சரி செய்தல், தேரை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை நெல்லையப்பர் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். தேரைதண்ணீர் அடித்து சுத்தம் செய்யும் பணிகள், தேர் சீலைகள் சரி செய்யும் பணிகளில் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !