மானாமதுரை சுந்தர விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா
ADDED :902 days ago
மானாமதுரை: மானாமதுரை சுந்தரபுரம் அக்ரஹாரம் தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மானாமதுரை கீழ்கரை சுந்தரபுரம் அக்ரகாரம் தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு யாகம் வளர்க்கப்பட்டு 108 சங்க அபிஷேகம் நடத்தப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ராஜேந்திர பிரசாத், தமிழரசி மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.