உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகையில் மேலும் ஒரு ஜீவசமாதி கண்டுபிடிப்பு; பக்தர்கள் வழிபாடு

திருவதிகையில் மேலும் ஒரு ஜீவசமாதி கண்டுபிடிப்பு; பக்தர்கள் வழிபாடு

பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை சுப்ரமணிய தேசிகர் சித்தர் ஜீவ அதிஷ்டானத்தில் மேலும் ஒரு ஜீவசமாதி கண்டுபிடிக்கப்பட்டது.


கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகையில் வீரட்டானேஸ்வரர் கோவில் பின்புறம் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 140 ஆண்டுகள் பழமையான சுப்ரமணிய தேசிகர் சித்தர் ஜீவ அதிஷ்டானம் உள்ளது. இக்கோவில் மூலவர் சுப்ரமணிய தேசிகர் சமாதியும், அதே வளாகத்தில் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், சிவஞான தம்பிரான் சுவாமிகள், குண்டலபரதேசி சுவாமிகள் ஆகியோரின் 4 ஜீவ சமாதிகள் உள்ளன. பக்தர்கள் அதிக அளவில் இங்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு முன்மண்டபம் கட்டும் பணிக்கான பூமி பூஜை கடந்த 4ம் தேதி நடந்தது. அடித்தளம் அமைக்க நேற்று பள்ளம் தோண்டும் போது, 4 அடி அகலத்தில் செங்கல் அடுக்கிய நிலையில் ஜீவ சமாதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே இங்கு, 4 சித்தர்களின் ஜீவ சமாதி உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சித்தர் ஜீவசமாதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புதிய ஜீவ சமாதியில் பக்தர்கள் பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !