சந்தன மாரியம்மன் கோயில் பால்குடம் ஊர்வலம்; அம்மனுக்கு 21 வகை அபிஷேகம்
ADDED :847 days ago
கமுதி: கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த ஜூன் 6ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்புபூஜை நடந்தது. 7ம் நாள் நிகழ்ச்சியாக விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பக்தர்கள் பால்குடம் எடுத்து கோயிலுக்கு சென்றனர். பின்பு சந்தன மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அக்னிசட்டி, சக்திகரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். விழாவில் கமுதியை சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.