ஐயப்பன் கோவிலில் பக்தி பாடல்கள்
ADDED :4810 days ago
கூடலூர்: கூடலூர் கோழிப்பாலம் சாஸ்தாகிரி ஐயப்பன் கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு பஜனை பாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. கூடலூர் கோழிப்பாலம் சாஸ்தாகிரி ஐயப்பன் கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு 6.00 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 7.00 மணி முதல் 8.30 மணி வரை கோவில் மண்டபத்தில் பஜனை பாடல் நிகழ்ச்சி நடந்தது.கோவில் அறக்கட்டளை தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கூடலூர் ஆர்.டி.ஓ., ஆதிமூலம், தாசில்தார் பழனிகுமார், கோவில் அறக்கட்டளை பொருளாளர் பிதாம்பரம், செயலர் நடராஜ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கமிட்டி செயலர் ரவீந்திரன் நன்றி கூறினார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.