லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு
ADDED :1212 days ago
கோவை; சுந்தராபுரம் காமராஜ் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் ஃபேஸ் - 1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி மாத முதல் சனிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள லட்சுமி நாராயண பெருமாளுக்கும் கருடாழ்வார்க்கும் அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.