/
கோயில்கள் செய்திகள் / ஆனி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடினார்கள்
ஆனி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடினார்கள்
ADDED :1214 days ago
ராமேஸ்வரம்: ஆனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
இன்று அமாவாசை யொட்டி தமிழகத்தில் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வருகை தந்தனர். இவர்கள் முதலில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் சிவ சிவ என கோஷமிட்டபடி அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார்கள். இதன்பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் புனித நீராடி விட்டு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.