உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறுமுகநேரி சிவன் கோயில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா கொடியேற்றம்

ஆறுமுகநேரி சிவன் கோயில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா கொடியேற்றம்

ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி, சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில், ஆனி உத்திரப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலையில் மஹா கணபதி ஹோமமும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை கும்ப பூஜையும் ஹோமமும், கொடிப்பட்டம் வீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து, அதிகாலை 5:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடிமரம் தர்ப்பை புல் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. பூஜையை, ஐயப்பபட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர். நிகழ்ச்சியில் கோயில் மணியம் சுப்பையா, பக்தஜன சபை சார்ந்த அரிகிருஷ்ணன், நகர்நல மன்ற தலைவர் பூபால்ராஜன், தொழிலதிபர் தவமணி, அ.தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ், டி.சி.டபிள்யு., தெரிசை ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, இரவு என சுவாமி, அம்பாள் வீதி உலா, பக்தி நிகழ்ச்சிகள் நடக்கிறது.வரும் 25ம் தேதி 10ம் திருவிழா நடைபெறும். ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனம், பக்தஜனசபை, மகளிர் குழு மற்றும் மண்டகப்படிதாரர்கள், சிவனடியார்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !