உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீட்கப்பட்ட 400 ஆண்டு பழமையான நந்தி சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட 400 ஆண்டு பழமையான நந்தி சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட நந்தி சிலை நேற்று திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 400 ஆண்டுகள் பழமையான ஒரு டன் எடையுள்ள நந்தி கற்சிலையும் அமர்ந்த நிலையிலான ஒரு பெண் சிலையும் மீட்கப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட சிலைகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. நிகழ்வில் முத்தாலங்குறிச்சி காமராஜ், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்யவள்ளி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !