அம்மாபட்டியில் பொங்கல் திருவிழா
ADDED :812 days ago
பேரையூர்: பேரையூர் அருகே பாப்பையாபுரம் மற்றும் அம்மாபட்டியில் கடந்த மூன்று நாட்களாக காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் துவங்கிய முதல் நாள் விழாவில் காளியம்மன் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரனைகள் நடந்தன. பக்தர்கள் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு முளைப்பாரி கரைத்தல் மஞ்சள் நீராட்டுக்களுடன் விழா நிறைவு பெற்றது.