உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெத்தனாட்சியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

பெத்தனாட்சியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

கமுதி: கமுதி அருகே முஷ்டகுறிச்சி கிராமத்தில் பெத்தனாட்சியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா முன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். இதனை முன்னிட்டு முஷ்டகுறிச்சி இருளப்பசாமி கோயிலில் இருந்து பெருமாள் கோயில் கிராமத்தின் முக்கிய வீதிகளில் காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். பின்பு கணபதி ஹோமம், அனுக்ஞை,சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வேதபாராயணம், பூர்ணாஹூதி, கும்பக்கடங்கள் தீர்த்தம் தீபாரதனை நடந்தது. பெத்தனாட்சியம்மனுக்கு பால், சந்தனம்,மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம்,தீபாரதனை நடந்தது.பின்பு விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !