சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் உழவாரப்பணி
ADDED :908 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் இராமலிங்க அடிகளாரின் சன்மார்க்க சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உழவாரப்பணி நடந்தது. இதில் பெண்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் இயக்கத்தினர் பங்கேற்று கோயிலை சுத்தம் செய்தனர். இதையடுத்து சன்மார்க்க சங்கத்தின் மூலம் சாயி சமிதி அமைப்பினர் வரதராஜன், ராஜாராம் சார்பில் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகே கேப்பை கூழ் மற்றும் புளியோதரை இலவசமாக வழங்கினர். தொடர்ந்து தினந்தோறும் மக்களுக்கு வழங்க தீர்மானித்தனர்.