உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு உழவாரப்பணி

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு உழவாரப்பணி

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆனித்தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு சிறப்பு உழவாரப்பணி நடந்தது. நெல்லைடவுன் நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேர் திருவிழா வரும் 25ம் தேதி துவங்குகிறது. ஜூலை 2ம் தேதி ஆனித் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு உழவாரப்பணி செய்வதற்காக அப்பர் வீதியுலாபுறப்பாடு நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து நேற்று நெல்லையப்பர் கோயிலில் பக்தர்கள் சார்பில் உழவாரப்பணி செய்யும் நிகழ்வு நடந்தது. தேர் சுத்தம் செய்தல், கோயில் வளாகத்தில் மாக்காளை (பெரியநந்தி) சுத்தம் செய்தல், அனுப்பு மண்டபம், ஆலய முகப்பு மண்டபத்தில் சிற்பங்களை புதுப்பித்தல், பெரிய சபாபதி மண்டபம், கோயில் முகப்பு பகுதிகள், பிரகாரங்கள் மற்றும் சன்னதிகளில் சீரமைப்பு பணிகளை பக்தர்கள் செய்தனர். இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் நெல்லையப்பர் கிளைக்கமிட்டியினர் இந்த சிறப்பு உழவாரப்பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் திருத்தொண்டர் பேரவை பக்தர்களும் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். ஜூன் 25ம் தேதியன்றும் மகா உழவாரப்பணி நடைபெறவுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அனைத்து உழவாரப்பணிக்குழுவினரும் இணைந்து பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !