உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருளன்னை ஸ்ரீ பாலரிஷி ஸ்ரீ விஸ்வ சீராஸினியின் சத்சங்கம் நிகழ்ச்சி

அருளன்னை ஸ்ரீ பாலரிஷி ஸ்ரீ விஸ்வ சீராஸினியின் சத்சங்கம் நிகழ்ச்சி

அவிநாசி: அவிநாசி பார்வதி கல்யாண மண்டபத்தில்,அருளன்னை ஸ்ரீ பாலரிஷி ஸ்ரீ விஸ்வ சிராஸினியின் சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அவிநாசியில் நடைபெற்ற சத்சங்கம் நிகழ்ச்சியில் அருளுரை வழங்கிய அருளன்னை ஸ்ரீ பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராஸினி சொற்பொழிவாற்றி பேசியபோது, எந்தெந்த இடத்தில் நல்வார்த்தைகள், இறைச்சொற்கள்,இன்பமயமான இறை ஆசைகள் நிரம்புகின்றதே அதுவே சத்சங்கம்.வீட்டில் நம்முடைய நற்சொற்கள்,நற்சிந்தனை, செய்யும்போது ஒரு மண்டலத்தில் அவ்விடத்தில் ஆன்மிக அலை உருவாகி நன்மை பயக்கும்.ஒவ்வொருவரும் சந்தோஷம் நிம்மதி கிடைக்க வேண்டும் என்று நினைத்து வெளியில் தேடுகிறார்கள்.வெளி நபர்கள் பேசும் சொற்கள் செயல்களால் எப்படி நமக்கு சந்தோஷம் நிம்மதி கிடைக்கும். எல்லாவற்றையும் நமக்குள் தேட வேண்டும்.நமக்கான பொறுப்பு இறைவனை தேடல் என்பது ஆகும். உலகில் எங்கு சென்றாலும் மனிதர்களின் நிறம் மாறலாம். அவர்களுடைய பிரச்சனைகள், வழிபாடுகள் முரண்பாடுகள் என அனைத்தும் ஒன்றாக உள்ளது.நம் சிந்தனை அனைத்தும் நற்சிந்தனை,நேர்மறையான எண்ணங்களைக் கொண்ட செயல்களாக இருக்க வேண்டும்.அனைவரிடத்திலும் ஆன்மீக தேடல் உள்ளது.ஆன்மீகம் என்பது கடமைகளை முடித்த பிறகு செய்வதல்ல.கடமைகளுடன் ஒன்றாக விளங்குவது.அறிவியல் சார்ந்த செயல்பாடுகளில் கூட ஆன்மீகம் நிறைந்து இருக்கும்.எந்த இடத்திலும் இறைவனை எந்த வடிவத்திலும் ரூபத்திலும் வழிபடலாம்.எந்த இடத்தில் நமக்கு நிம்மதி கிடைக்கிறதோ அந்த இடம்தான் ஆன்மீகம்.தினமும் பிறருக்கு நல்லதை நினைக்கும் நேரம் கூட ஆன்மீகம்தான்.எந்த இடத்தில் நின்று நல்ல வார்த்தைகள் பேசுகிறோமோ அந்த இடத்தில் ஆன்மீகத்தின் ஒளி அதிர்வுகள் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு சொற்பொழிவு ஆற்றினார். சொற்பொழிவு நிறைவான பிறகு பக்தி பாடல்களுக்கான பஜனை நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !