நீங்களே பொறுப்பாளர்
ADDED :996 days ago
* நீங்கள் எதை சம்பாதிக்கிறாரோ அதற்கு, நீங்களே பொறுப்பாளர்.
* சத்தியத்தை அறிந்துகொண்ட பிறகு அதன்படி நடந்து செல்லுங்கள்.
* ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கிறான்.
* உங்களுடைய கூலியை மறுமைநாளன்று முழுமையாகப் பெறுவீர்கள்.
* மஹர் கொடுத்து செய்யப்படும் திருமணங்கள் மட்டுமே இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும்.
* பெண்களுக்குரிய மஹரை மனமுவந்து கொடுங்கள்.
* அழகிய நடத்தை, சகிப்புத்தன்மை, நடுநிலைப்போக்கு ஆகியவை நற்பண்பின் அடையாளம்.
* தன் செயல்களை குறித்து சுயமதிப்பீடு செய்பவர் அறிவாளி.
* மரணத்திற்கு பிறகு வர இருக்கும் வாழ்வுக்காக நற்செயல்களை செய்யுங்கள்.
* தீயவர்கள் மரணத்தை விரும்பமாட்டார்கள்.
– பொன்மொழிகள்