உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணம்பாளையத்தில் உலக நலன் வேண்டி கோமாதா பூஜை

கண்ணம்பாளையத்தில் உலக நலன் வேண்டி கோமாதா பூஜை

சூலூர்: உலக நலன் வேண்டி , பா.ஜ., சார்பில், கண்ணம்பாளையத்தில் கோமாதா பூஜை நடந்தது. சூலூர் தெற்கு ஒன்றிய பா.ஜ., ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில், உலக நன்மை, உலக அமைதி வேண்டி, கண்ணம்பாளையம் ஸ்ரீ கோடி சுவாமிகள் சித்தர் ஆலயத்தில் கோமாதா பூஜை நடந்தது. தெற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மலர் மாலைகள், வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, கோமாதாவுக்கு அர்ச்சனைகள் நடந்தன. பங்கேற்ற அனைவரும் கோமாதாவுக்கு மலர் தூவி வழிபட்டனர். தொடர்ந்து, பல்வேறு திரவியங்களை கொண்டு ஹோமம் நடந்தது. பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, ஆன்மீக பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ், ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், மகளிரணி தலைவர் விசாலாட்சி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.தொடர்ந்து, அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !