உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெலிங்டன் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்

வெலிங்டன் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்

குன்னூர்: வெலிங்டன் ஐயப்பன் கோவிலில், கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக திருவிழா துவங்கியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊட்டி சாலை, வெலிங்டனில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில், 1967ம் ஆண்டு, சபரிமலை தந்திரியாக இருந்த, மறைந்த மகேஸ்வரரு தந்திரியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.தற்போது மீண்டும் கோவில் புனரமைக்கப்பட்டு, வரும் 21ம் தேதி கும்பாபிஷேகம், நடக்கிறது. இதனையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது மாலை 5:30 மணிக்கு ஆச்சார்ய வர்ணம் புண்ணியாகம், பிரசாத சுத்தி கிரியைகள், ரக்ஷோக்ன ஹோமம், வாஸ்து ஹோமம், வாஸ்து கலசம் வாஸ்து பலி, அத்தாழ பூஜை நடந்தன. இன்று கணபதி ஹோமம் பிம்ப சுத்தி கிரியைகள் சதுர்சுத்தி, தாரா பஞ்சகவ்யம் பஞ்சகம், 25 கலச பூஜை, பகவத் சேவை கலசாதி வாசம், நாள சுத்தி அத்தாழ பூஜை நடக்கின்றன. நாளை காலை 6 மணிக்கு அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமம், கலச திங்கள் அதிவாசம் விடர்த்தி, உஷ பூஜை, பானி தானம் தொடர்ந்த அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கலசாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 9:15 மணிக்கு, உபதேவதா கலசங்கள் கும்பாபிஷேகம் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு செண்டை மேளம் முழங்க ஐயப்பன் திருவீதி ஊர்வலம் நடக்கிறது. சபரிமலை பரம்பரை தலைமை குருக்கள் கண்டரு மோகனரு தந்திரி தலைமையில் பூஜைகள் நடந்து வருகிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !