உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி தர்மராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா 23ல் துவக்கம்

காளஹஸ்தி தர்மராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா 23ல் துவக்கம்

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயில் ஆன திரோபதி சமேத தர்மராஜ சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 23ம் தேதி முதல் 5. 7. 2023 வரை வெகு விமர்சையாக நடத்தப்பட உள்ளதாக கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரியப்படுத்தினார். இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை தர்மராஜ சுவாமி பிரம்மோற்சவ விழாவிற்கான சுவரொட்டிகளை ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மது சூதனரெட்டி மற்றும் சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாலுகா சீனிவாசலு இன்று சிவன் கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் வெளியிட்டனர் .ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் (தீ மிதி விழா )தர்மராஜ சுவாமி கோயில் வருடாந்திர விழாவை வெகு விமர்சையாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கோயில் துணை நிர்வாக அதிகாரி வெங்கட சுப்பையா மற்றும்  கோயில் அதிகாரிகள் அர்ச்சகர்கள் புரோகிதர்கள் வேத பண்டிதர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !